பொது அறிவை மாணவர்கள் வளர்க்க வேண்டும்: ஆரணி சார்பு நீதிபதி அறிவுரை

பொது அறிவை மாணவர்கள் வளர்க்க வேண்டும் என்று ஆரணி சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.

பொது அறிவை மாணவர்கள் வளர்க்க வேண்டும் என்று ஆரணி சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.
ஆரணியை அடுத்த வேலப்பாடி ஆப்பிள் இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், ஆரணி சார்பு நீதிபதியுமான எஸ்.எழில்வேலவன் தலைமை வகித்து பேசியதாவது:
அடுத்தவர் பொருள்களுக்கு மாணவர்கள் ஆசைபடக் கூடாது. அது தவறான செயலாகும். பள்ளியில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். 14 வயது வரை கட்டாயக் கல்வி கற்க வேண்டும் என சட்டம் உள்ளது.
மாணவர்கள் தொலைக்காட்சியில் நடப்பு நிகழ்வுகள், அறிவியல் சம்பந்தமான செய்திகளை பார்த்து தங்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், உயர் கல்வி பயிலும்போது எந்தத் தேர்வாக இருந்தாலும், அதனை எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு பயில வேண்டும் என்றார்.
பின்னர், மாணவர்களுக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறித்த பேச்சு, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளை சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன் வழங்கினார்.
விழாவில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், பள்ளித் தாளாளர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர் எ.சிகாமணி, சங்கச் செயலர் டி.திருஞானம், வழக்குரைஞர்கள் சி.சண்முகம், செந்தில், கைலாஷ், ஆர்.நிர்மலா, எ.பாபு, பி.வாசுதேவன், பரந்தாமன், முதுநிலை நிர்வாக உதவியாளர் எ.அண்ணாமலை, பள்ளி முதல்வர் சி.நிர்மல்குமாரி, ரேணுகாம்பாள்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போளூர்: போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியைச் சேர்ந்த பூங்கொல்லைமேடு அரசு ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட்ராஜன் தலைமை வகித்தார்.
பள்ளியின் மேலாண்மைக்குழுத் தலைவர் நிர்மலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
பள்ளி ஆசிரியை லீலாராணி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com