பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவியதன் எதிரொலி: சின்னகோளாபாடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கம் அருகே சின்னகோளாபாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு அண்மையில் காய்ச்சல் பரவிய நிலையில், அந்தக் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

செங்கம் அருகே சின்னகோளாபாடி கிராமத்தில் பொதுமக்களுக்கு அண்மையில் காய்ச்சல் பரவிய நிலையில், அந்தக் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னகோளாபாடி கிராமத்தில் பொதுமக்கள் சிலருக்கு அண்மையில் காய்ச்சல் பரவியது. இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் தலைமையில், அந்தக் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சின்னகோளாபாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் முறையாக குளோரினேஷன் செய்யப்படுகிறதா, தெருக்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகள் தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகின்றனவா என அந்தப் பகுதி மக்களிடம் ஆட்சியர்  கேட்டறிந்தார்.
மேலும், இரவு நேரங்களில் தெரு விளக்குகள் முறையாக எரிகின்றவா, குப்பை தினந்தோறும் அள்ளப்படுகிறதா, கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்ததுடன், இதுகுறித்து கிராம பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, குடியிருப்புப் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கிராம மக்களிடம் அவர் அறிவுறுத்தினார். ஆணையாளர்கள் சக்திவேல், மணிஎழிலன், வட்டாட்சியர் உதயகுமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com