3,211 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற விழாக்களில் 3,211 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற விழாக்களில் 3,211 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
வந்தவாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை 14 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,068 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வந்தவாசி ஆண்கள் பள்ளி, கீழ்க்கொவளைவேடு, இரும்பேடு ஆகிய 3 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 451 மாணவர்களுக்கும், வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வந்தவாசி மகளிர் பள்ளி, கீழ்க்கொடுங்காலூர், மருதாடு ஆகிய 3 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 827 மாணவர்களுக்கும், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தெள்ளாறு, தேசூர் ஆண்கள் பள்ளி, தேசூர் மகளிர் பள்ளி, தெய்யாறு, நல்லூர், மழையூர், பொன்னூர், குண்ணகம்பூண்டி ஆகிய 8 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 790 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். 
செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன், செய்யாறு கோட்டாட்சியர் கிருபானந்தம், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகர், கல்விக்குழுத் தலைவர் எ.விஜய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் டி.வி.பச்சையப்பன், ஆர்.அர்ஜுனன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன், வி.தங்கராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, செயலர் டி.கே.பி.மணி, பேரவை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தர்மதுரை, இளைஞரணி மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணா மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 1,143 பேருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) கோகிலவாணி வரவேற்றார்.
அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 619 பேர், திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 59 பேர், திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 72 பேர் என மொத்தம் 750 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார்.
விழாவில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, பள்ளி துணை ஆய்வாளர் குமார், மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.மெய்யழகன், தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளியில்...: திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 393 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
விழாவில், தமிழக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், முன்னாள் வணிகவரி ஆலோசனைக்குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com