நெடுஞ்சாலையோரம் கட்டப்படும் மாடுகளால் விபத்து நிகழும் அபாயம்

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கட்டப்படும் மாடுகளால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கட்டப்படும் மாடுகளால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலையோரம் மாடுகள் கட்டப்படுவதைத் தடுக்க காவல் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கத்தில் இருந்து புதுப்பாளையம் வழியாக போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முன்னூர்மங்கலம், கிருஷ்ணா நகர் பகுதியில் விவசாயிகள் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு நீண்ட கயிறு மூலம் நெடுஞ்சாலையோரம் கட்டி வைக்கின்றனர்.
இந்த மாடுகள் புற்களை மேய்ந்துகொண்டு சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறு புறத்துக்கு செல்கின்றன. இதனால் சாலையில் மாடுகள் கட்டப்பட்டுள்ள கயிறுகள் கிடப்பதை அறியாமல் நெடுஞ்சாலையில் அதி வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
நெடுஞ்சாலையில் பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் வருவோர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி மாடுகளை மறு புறத்துக்கு விரட்டிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் மாடுகள் கட்டப்பட்டுள்ள கயிறுகள் சிக்குவதன் மூலம் வாகனங்களில் செல்வோருக்கும், மாடுகளுக்கும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செங்கம் } போளூர் நெடுஞ்சாலையோரம் மாடுகள் கட்டப்படுவதைத் தடுக்க காவல் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுகளும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com