அனக்காவூர் வட்டாரத்தில் மத்திய வேளாண் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஆய்வு

அனக்காவூர் வட்டாரத்தில் மத்திய வேளாண் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கயர்கன்னி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அனக்காவூர் வட்டாரத்தில் மத்திய வேளாண் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கயர்கன்னி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அனக்காவூர் வட்டாரத்தில் 2015-16ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நல்லாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகாவுக்கு ரூ.94 ஆயிரம் மானியத்தில் நெல் நடவு இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை பார்வையிட்டு கயர்கன்னி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், எருமைவெட்டி கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் இணைந்து அமைக்கப்பட்ட நிழல்வலை குடிலை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
 பின்னர், அந்தப் பகுதியில் நடைபெற்ற நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சியில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பு வேளாண் அலுவலர் கயர்கன்னி, நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் கரும்பு பயிரிடுவதால் தண்ணீர் சிக்கனம் மற்றும் மகசூல் அதிகரிப்பது குறித்து விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் வு.ஜவஹர் பிரசாத்ராஜ், முதன்மை கரும்பு அலுவலர் கோவிந்தராஜன், கரும்பு அலுவலர் வனிதா ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு சாகுபடி உயர் தொழில்நுட்பம் குறித்து தெரிவித்தனர்.
நெட்டாபின் நிறுவனத்தின் பிரதிநிதி சக்திவேல் கலந்து கொண்டு கரும்பு சாகுபடிக்கான சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்து செயல் விளக்கமாக விளக்கினார்.
அனக்காவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, இனி வரும் காலங்களில் தண்ணீர் சிக்கனத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயறு வகை பயிர்கள் மற்றும் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கரும்பு பயிரிடத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை கூறியதுடன், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com