வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பட்டியலில்
புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கான மனுக்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
வரும் 31-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்படும். இது
தவிர அக்டோபர் 8, 22-ஆம் தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
முகாம்களில் தேவையான படிவங்களை வழங்கவும், பூர்த்தி செய்த படிவங்களைப் பெறவும் உரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, அக்டோபர் 7, 21-ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தக் கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை படித்துக் காட்டவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்றவற்றை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க h‌t‌t‌p://‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n​ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com