செங்கத்தில் மழைச் சேதப் பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

செங்கத்தில் மழைச் சேதப் பகுதிகளை எம்எல்ஏ மு.பெ.கிரி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கத்தில் மழைச் சேதப் பகுதிகளை எம்எல்ஏ மு.பெ.கிரி புதன்
கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கம் பகுதியில் பெய்த தொடர் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், செங்கம்  துக்காப்பேட்டை பகுதியில் உள்ள வரதந்தாங்கல் ஏரி உடையும் அபாய நிலையில் உள்ளது. இந்த ஏரிக்கு காட்டாற்று வெள்ளம் அதிகளவில் வருவதால் ஏரியின் கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
எனவே, ஏரிக்கரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரிக்கரை உடையாமல் பாதுகாக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தொடர் காட்டாற்று வெள்ளம் காரணமாக இந்தப் பகுதியில் விளைவிக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனிடையே, ஏரிகரையோரம் உள்ள காயம்பட்டு, செந்தமிழ் நகர், அழகாபுரி நகர் ஆகிய பகுதி மக்கள் ஏரி எந்த நேரத்தில் உடையலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் தொகுதி எம்எல்ஏ
மு.பெ.கிரி, வட்டாட்சியர் உதயகுமார், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிப் பொறியாளர் ராஜாராம், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், காட்டாற்று நீரை விவசாய  நிலங்கள் பாதிக்காத வகையில் மலை அடிவாரத்திலேயே செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் திருப்பி விடுவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
பின்னர், கட்டாற்று வெள்ளம் வரும் ஓடை, செங்கம் ஏரி, வரதந்தாங்கல் ஏரி ஆகிய பகுதிகளை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏரிக்கரையோரம் குடியிருக்கும் மக்களை இரவு நேரங்களில்  பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். உடன், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com