மனுநீதி நாள் முகாம்: 271 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 271 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 271 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலசப்பாக்கம் வட்டம், அருணகிரிமங்கலம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட விநியோக அலுவலர் அரிதாஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயிச் சான்று உள்பட 49 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, அதிமுக மாவட்ட துணைச் செயலர் எல்.என்.துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கருணாமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேக்களூர்: கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சுகுணா தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சரவணன் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 169 மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்களில் 90 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 69 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்கப்பட்ட 90 மனுக்களில் விவசாயிகளுக்கு சிறு விவசாயிச் சான்று, பட்டா மாறுதல், உள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் வழங்கினார்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், தோட்டக்கலைத் துறை அலுவலர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஞானசேகரன், மேக்களூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னசமுத்திரம்: செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம், வளையாம்பட்டு, குமாரசாமிபாளையம் ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சென்னசமுத்திரம் கிராம ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன்,  மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ராஜஸ்ரீ கலந்து கொண்டு, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயிச் சான்று உள்பட 132 பயனாளிகளுக்கு  நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
முகாமில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கமித்ரா உள்பட வருவாய்த் துறையினர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சிச் செயலர் சிவபாலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com