புதுப்பாளையம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

செங்கம் அருகே புதுப்பாளையம் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

செங்கம் அருகே புதுப்பாளையம் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட 12 வார்டுகளிலும் தொடர் மழையால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், அனைத்து குடிநீர்த் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கும் வகையில் கிடக்கும்  தேங்காய்  மட்டை, சைக்கிள் டயர் உள்ளிட்ட பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.  குப்பையை வீட்டின் அருகே கொட்டாமல் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் கொடுக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கியதுடன், ஒட்டுமொத்த தூய்மைப் பணியை பார்வையிட்டார்.
புதுப்பாளையம் அரசு ஆரம்ப  சுகாதார நிலைய மருத்துவர் சத்தியநாராயணன், பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திமதி மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிப் பணியாளர்கள், கிராம செவிலியர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com