நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விசிக உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்ட

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஆரணியை அடுத்த இரும்பேடு நான்குமுனை சந்திப்புச் சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு முற்போக்கு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் து.திருமால் தலைமை வகித்தார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கிவைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் ந.முத்து, துணைச் செயலர் வெ.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். மதிமுக மாவட்டச் செயலர் டி.ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
திமுக ஒன்றியச் செயலர் தட்சிணாமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொன்னுரங்கம், சசிக்குமார், மு.ரஞ்சித், பெ.வெங்கடேசன், மோ.ரமேஷ், சிரஞ்சீவி, முருகன், கார்த்தி, சின்னராசு, சரண், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி கூறினார்.
வந்தவாசி: வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முற்போக்கு மாணவர் கழகப் பொறுப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார்.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் மேத்தாரமேஷ், ஏழுமலை, சிவகுமார், விநாயகம், ரஞ்சித், சீனுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போளூர்: போளூரில் நடை
பெற்ற போராட்டத்துக்கு முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கோ.ரமேஷ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் நீல.சந்திரகுமார், மாவட்டச் செயலர் பு.செல்வம், தொகுதிச் செயலர் பொன்.உதயகுமார், மாவட்ட துணைச் செயலர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில், செய்தித் தொடர்பாளர் சங்கதமிழன், மாவட்டப் பொருளாளர் வடிவேல், ஒன்றியச் செயலர்கள் பாலசுப்பிரமணியன், பாக்கியராஜ், நகரச் செயலர் வேல்முருகன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், முற்போக்கு மாணவர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com