வருவாய்த் துறை அமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்த ஆலோசனை

ஆரணியில் வரும் 18-ஆம் தேதி வருவாய்த் துறை அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆரணியில் வரும் 18-ஆம் தேதி வருவாய்த் துறை அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில், ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆரணி வருவாய்க் கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், ஆரணி வருவாய்க் கோட்டம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக ஆரணியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாருக்கு அதிமுக சார்பில் வரும் 18-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆரணி எம்எல்ஏ அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, பாராட்டு விழாவுக்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாரை மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் வரவேற்பது குறித்தும், இந்த விழாவில் கட்சியினர் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள்  பி.ஆர்.ஜி.சேகர், இராகவன், செல்வராஜ், நகர நிர்வாகி பாரிபாபு, மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், பேரூராட்சிச் செயலர் பாண்டியன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com