தேர்வெழுதச் சென்ற மாணவி கடத்தல்: மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.யிடம் மனு 

செங்கம் அருகே வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். 

செங்கம் அருகே வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.
 செங்கத்தை அடுத்த பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு எழுதச் சென்ற அவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
 இந்த நிலையில், தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவியை செங்கத்தை அடுத்த பொன்னி தண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ராம்ராஜ், கணேசன் மகன் பவன்குமார், பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
 இதுகுறித்து, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
 இதனால், ரமேஷ், அவரது மனைவி சுசிலா மற்றும் உறவினர்கள் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com