கீழ்பென்னாத்தூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மோகன் தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், எம்ஜிஆர் சத்துணவுத் திட்ட செயல்பாடுகளில் தங்களுடைய ஒருங்கிணைப்பை செலுத்த வேண்டும் என்றும் பேசினார்.
சில பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று டி.கே.லட்சுமி நரசிம்மன் உறுதி அளித்தார்.
கூட்டத்தில், பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களை அகற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com