ஆடி அமாவாசை: காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, செங்கத்தை அடுத்த கிளையூர் தாழைமடுவு ஸ்ரீகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன. தொடர

ஆடி அமாவாசையையொட்டி, செங்கத்தை அடுத்த கிளையூர் தாழைமடுவு ஸ்ரீகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்த காளியம்மனை வழிபட்டுச் சென்றனர். நிகழ்ச்சிக்காக செங்கம் அரசு நகர்ப் பேருந்து பணிமனை சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மலை கிராம
மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com