போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

செங்கத்தில் சுவாமி விவேகானந்தரின் 125-ஆவது ஆண்டு சிக்காகோ சொற்பொழிவு தின போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நீதிபதி எஸ்.முனுசாமி அண்மையில் பரிசுகளை வழங்கினார்.

செங்கத்தில் சுவாமி விவேகானந்தரின் 125-ஆவது ஆண்டு சிக்காகோ சொற்பொழிவு தின போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நீதிபதி எஸ்.முனுசாமி அண்மையில் பரிசுகளை வழங்கினார்.
 சுவாமி விவேகானந்தரின் 125-ஆம் ஆண்டு சிக்காகோ சொற்பொழிவு தினத்தையொட்டி, சுவாமி விவேகானந்தர் குறித்த பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் 59 பள்ளிகள், 8 கல்லூரிகளைச் சேர்ந்த 1,677 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 இதில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 520 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றுகளும், பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு பரிசு, சான்றுகளும் வழங்கும் நிகழ்ச்சி செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் பாண்டுரங்கன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். மீனாட்சி கல்வியியல் கல்லூரித் தாளாளர் கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கினார்.
 சிறப்பு அழைப்பாளராக செங்கம் நீதித்துறை நடுவர் எஸ்.முனுசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். முடிவில் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளைச் செயலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com