ஆரணியில் 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

ஆரணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும்

ஆரணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையக் கட்டடங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஆரணியில்  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ஆரணி நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில், கமண்டல நாக நதி ஆற்றுப்பாலம், நீரேற்று நிலையம், நவீன எரிவாயு தகனமேடை (புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில்) அருகில், மாடு தொட்டி வளாகம் என மொத்தம் 5 இடங்களில் ரூ.2 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் கட்டடங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் கு.அசோக்குமார், பொறியாளர் ஆர்.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிமுக பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், நகர அவைத் தலைவர் ஜோதிலிங்கம், கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com