செய்யாறு பேருந்து நிலையம் அருகேமதுக் கடை மீண்டும் திறப்பு: பொது மக்கள் சாலை மறியல்

செய்யாறு பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை மீண்டும் அரசு மதுக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை


செய்யாறு பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை மீண்டும் அரசு மதுக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே ஏற்கெனவே 9233 என்ற எண் கொண்ட அரசு மதுக் கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, செய்யாறில் அரசு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் பெண்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்தக் கடையை ஆட்சியர் உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் காந்தி சாலையில் சனிக்கிழமை 9233 என்ற எண் கொண்ட அதே அரசு மதுக் கடையை திறந்து விற்பனையைத் தொடங்கினர். இதனையறிந்த அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்று மதுக் கடையை முற்றுகையிட்டு, அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலர் கடையினுள் நுழைந்து மதுப் புட்டிகளை எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த செய்யாறு போலீஸார், மதுக் கடையினுள் புகுந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், காந்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால், மதுக் கடையின் மேற்பார்வையாளர் கடையின் கதவை மூடினார். கடை மூடப்பட்ட பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com