தக்கண்டராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஊஞ்சல் சேவை மண்டபத்துக்கு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஊஞ்சல் சேவை மண்டபத்துக்கு கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை சுதர்சன ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, விக்னேஷ்வர பூஜை, மாத்ருகா பூஜை, ஆசார்ய ரித்ஷக்ன வர்ணம், விசேஷ மூலமந்திரம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை காலை சாக்த அனுஷ்டானம், புண்யாகவாசனம், மண்டப பலி, தேவி மஹாத்மிய பாராயணம், சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
விழாவில் பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com