பேருந்துக் கட்டண உயர்வு: திருவண்ணாமலையில் கண்டன பொதுக்கூட்டம்

தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை திமுக, காங்கிரஸ்,

தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலர் ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார்.
தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் 
ஜி.குமார், வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, மதிமுக மாவட்டச் செயலர் ஆரணி டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் வரவேற்றார். 
முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, மதிமுக தீர்மானக்குழுச் செயலர் மணிவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பனர் எம்.வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கு.ஜோதி, முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் இ.முகமதுஅலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் நீல.சந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் வே.முத்தையன், முன்னாள் எம்எல்ஏக்கள் பி.எஸ்.விஜயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், ஆர்.புருஷோத்தமன், எ.குணசேகரன், மதிமுக மாநில நிர்வாகி சீனி.கார்த்திகேயன், திமுக நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, திமுக அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com