மனுநீதி நாள் முகாம்: 159 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலையை அடுத்த சு.நல்லூர், வேட்டவலத்தை அடுத்த நாரையூர் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் 159 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலையை அடுத்த சு.நல்லூர், வேட்டவலத்தை அடுத்த நாரையூர் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்களில் 159 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையை அடுத்த சு.நல்லூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் மு.அரிதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். முகாமையொட்டி, ஏற்கெனவே பெறப்பட்ட 130 மனுக்களில் 78 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இவற்றில் பட்டா மாறுதல், உட்பிரிவுச் சான்று, இலவச வீட்டு மனைப்பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று, குடும்ப அட்டை, விவசாயிகளுக்கான விதை மற்றும் இடுபொருள் உள்பட 78 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, வேளாண் உதவி அலுவலர் பழனி, நில அளவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாரையூர் கிராமத்தில்...: வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சுகுணா தலைமை வகித்தார். 
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியர் சித்தாராமன், வருவாய் ஆய்வாளர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் மு.அரிதாஸ், கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 81 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். 
முகாமில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏங்கல்ஸ்பிரபு, உதயகுமார், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com