திருவண்ணாமலை நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை

திருவண்ணாமலையில் உள்ள பிரபல 3 நகைக் கடைகளில் வியாழக்கிழமை மாலை முதல் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள பிரபல 3 நகைக் கடைகளில் வியாழக்கிழமை மாலை முதல் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, தேரடி தெரு, திருவூடல் தெரு, அசலியம்மன் கோயில் தெருக்களில் உள்ள 3 நகைக் கடைகளுக்கு வியாழக்கிழமை மாலை சுமார் 15 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் திடீரென வந்தனர். 
பின்னர், கடைகளின் கதவுகளை மூடிவிட்டு சோதனை செய்யத் தொடங்கினர்.
தொடர்ந்து, இரவு முழுவதும் சோதனை செய்தனர். இதுதவிர, நகைக்கடை உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. 
நகைகளின் இருப்பு விவரம், விற்பனை விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்ததாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதா என்று சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே மத்தலாங்குளத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடையில் இதே போன்று வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com