சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி திருவண்ணாமலையில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் மின் வாரிய ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் மின் வாரிய ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் வட்டத் தலைவர் பி.சம்பத் தலைமை வகித்தார்.
பொருளாளர் வி.டி.மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சம்மேளனத்தின் மாநில இணைச் சயலர் கே.சம்பத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டின் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com