37 பேருக்கு நவீன காது கேட்கும் கருவிகள் அளிப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 37 பேருக்கு நவீன காது கேட்கும் கருவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷகில் அஹமது தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் குப்புராஜ், நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் உதவிப் பேராசிரியர் எம்.ஆர்.கே.ராஜசெல்வம் வரவேற்றார். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் எஸ்.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 37 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை வழங்கினார்.
விழாவில் காது, மூக்கு, தொண்டைப் 
பிரிவின் இளநிலை உள்ளிருப்பு மருத்துவர் அரவிந்தன், மருத்துவர்கள் கமலக்கண்ணன், லலிதா, சிந்துமதி, செவித் திறன் ஆய்வாளர் மோகன் மற்றும் மருத்துவர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் தகுதியானோருக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விழா: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில், கிராமிய பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து மாணவ, மாணவிகள் வழிபட்டனர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற உரியடித் திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதேபோல, அரசு மருத்துவமனையின் ஏ.ஆர்.டி. மையம் சார்பிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com