திருவண்ணாமலை, செய்யாறில் பொங்கல் பொருள்கள் அமோக விற்பனை

திருவண்ணாமலையில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான புத்தாடை, புதுப்பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்

திருவண்ணாமலையில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான புத்தாடை, புதுப்பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருள்களின் விற்பனை சனிக்கிழமை (ஜனவரி 13) விறுவிறுப்பாக நடைபெற்றது. நகரின் முக்கியச் சாலைகளில் அடிக்கடி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை சனிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை தேரடி தெரு, பூ மார்க்கெட் பகுதி, காமராஜர் சிலை, அண்ணா நுழைவு வாயில், திருவூடல் தெரு, திருவள்ளுவர் சிலை, வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதிகளில் ஏராளமான தாற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு புதுப்பானைகள், புதுத் துணிகள், மஞ்சள் கொம்புகள், கரும்புகள், மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மா இலைகள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
விறுவிறு வியாபாரம்: பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வானாபுரம், செங்கம், போளூர், வேட்டவலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் வருவது வழக்கம்.
அதன்படியே, போகிப் பண்டிகை தினமான சனிக்கிழமை ஏராளமானோர் திருவண்ணாமலையில் குவிந்ததால் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெருக்களில் ஏராளமான தாற்காலிக சாலையோர துணி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பெரிய, பெரிய துணி கடைகளைக் காட்டிலும் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்றது.
ஒரு ஜோடி கரும்பு ரூ.80: தாற்காலிகக் கடைகளில் ஒரு ஜோடி கரும்பு அதன் உயரம், தடிமனுக்கு ஏற்ப ரூ.70 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டன. மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.20-க்கும், மா இலை, அருகம்புல் சேர்ந்த கட்டு ரூ.10-க்கும், கோலம் போடுவதற்கான கலர் பொடிகள் ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டன.
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் வெளியே வராமல் இருந்தனர்.
போகிப் பண்டிகை தினமான சனிக்கிழமை திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெரு, சின்னக்கடைத் தெரு, பெரிய தெரு, திருமஞ்சன கோபுரத் தெரு, மத்தலாங்குளத் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு தெருக்களில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை அடிக்கடி போக்குவரத்து நெரசல் ஏற்பட்டது.
ஒரே நாளில் பல ஆயிரம் பேர் பொங்கல் பொருள்கள் வாங்கக் குவிந்ததால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
செய்யாறு போகிசந்தை: செய்யாறு காமராஜர் நகர் மார்க்கெட் பகுதியில், ஆண்டுக்கு ஒரு முறை கூடும் போகி சந்தையில் சனிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றன. இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள், தானிய வகைகள், புதிய மண்பாண்டங்கள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுக்கு கயிறு, கிலுகிலுப்பு உள்ளிட்டவை விற்பனைக்கு குவிக்கப்ட்டிருந்தன. இதனை செய்யாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெரும்பாலானோர் போகிச் சந்தைக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடத் தேவையான காய்கறிகள், தானிய வகைகளை வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com