சமுதாயம் மீது பாசம் வைத்து சேவை செய்பவர்கள் காவல் நண்பர்கள்: ஆய்வாளர் மதியரசன் பெருமிதம்

சமுதாயம் மீது பாசம் வைத்து சேவை செய்பவர்கள் காவல் நண்பர்கள் என்று தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் கூறினார். 

சமுதாயம் மீது பாசம் வைத்து சேவை செய்பவர்கள் காவல் நண்பர்கள் என்று தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் கூறினார்.
தண்டராம்பட்டு காவல் நண்பர்கள் குழு சார்பில், இரவு ரோந்து பாதுகாப்புப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  திருவண்ணாமலை மாவட்ட காவல் நண்பர்கள் குழுவின் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
தண்டராம்பட்டு காவல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் புவியரசு, துணை ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.முரளி கிருஷ்ணன் வரவேற்றார். தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காவல் நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கு சீருடைகள், அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
 காவல் நண்பர்களை எல்லாம் நான் உயர்வாக நினைக்கிறேன். நாங்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்கிறோம். நீங்கள் சமுதாயம் மீது பாசம் வைத்து, குற்றங்கள் குறைய வேண்டும் என்ற நோக்கில் மக்களுக்காக இரவு முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக உடலுழைப்பை கொடுத்து, சமூக சேவை செய்கிறீர்கள். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தண்டராம்பட்டு பகுதியில் காணாமல் போன நரிக்குறவரை கண்டுபிடிக்க காவல் நண்பர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். 
இதைப் பாராட்டி அப்போதைய தமிழக டிஜிபி ஐ.கே.கோவிந்தன் தண்டராம்பட்டு காவல் நண்பர்கள் குழுவுக்கு பதக்கம் வழங்கினார் என்றார்.
கூட்டத்தில், தண்டராம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஜெ.ஜெயசங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் இரா.மோகன், எஸ்.கணபதி, தண்டராம்பட்டு காவல் நண்பர்கள் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.கோபி, கராத்தே மாஸ்டர் விஜய், ஹரி, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com