ரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி விழா: வாகனங்கள், கடைகளுக்கு சுங்க வரி ரத்து: எம்எல்ஏ தகவல்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி விழாவையொட்டி, விழாவுக்கு வரும் வாகனங்கள், கடைகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கூறினார்.

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளி விழாவையொட்டி, விழாவுக்கு வரும் வாகனங்கள், கடைகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கூறினார்.
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடி மாதம் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆடி வெள்ளி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமையில் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பேசியதாவது:
படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் ஆடி வெள்ளியையொட்டி, நிகழாண்டு அனைத்துவிதமான வாகனங்கள், கடைகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. விழாவில் தூய்மைக் காவலர்கள் 100 பேர் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சுகாதாரத் துறை சார்பில் 2 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், பாதுகாப்புக்காக 2  தீயணைப்பு வாகனங்களும், பக்தர்களுக்காக 10 நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. படவேடு அருகே உள்ள மதுக்கடைகள் 7 வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகின்றன.
ஆட்டோக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. கோவிலைச் சுற்றி 65 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸாரல் கண்காணிக்கப்படுகிறது. மேலும், குடிநீர், போக்குவரத்து, கழிப்பறை, மின்சாரம், தங்கும் வசதி உள்பட பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளன என்றார்.
கூட்டத்தில், தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) பானு, போளூர் வட்டாட்சியர் தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் அன்புநாதன், கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com