நூல்கள் வெளியீட்டு விழா

திருவண்ணாமலை உலக சான்றோர்ச் சங்கம், திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து நூல்கள் வெளியீட்டு விழா, சாதனை மகளிருக்கு விருதுகள் வழங்கும் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.

திருவண்ணாமலை உலக சான்றோர்ச் சங்கம், திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து நூல்கள் வெளியீட்டு விழா, சாதனை மகளிருக்கு விருதுகள் வழங்கும் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.
திருவண்ணாமலை, கணேஷ் பன்னாட்டு தங்கும் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு உலக சான்றோர் சங்கத் தலைவர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் தலைமை வகித்தார்.
மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமார், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மு.மண்ணுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ந.சண்முகம் வரவேற்றார்.
எழுத்தாளர் ந.சண்முகம் எழுதிய முகநூல் மாணிக்கங்கள் என்ற நுலை திருவண்ணாமலை அமராவதி முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைவர் சீனி.கார்த்திகேயன் வெளியிட, ஓவியர் சோ.ஏ.நாகராசன், ஆர்.சாமிக்கண்ணு, ஏ.வி.சீனுவாசன், கவிஞர் லதா பிரபுலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளர் ந.சண்முகம் எழுதிய மற்றொரு நூலான சிந்தனை மலர்கள் என்ற நூலை பேராசிரியர் ப.வேட்டவராயன் வெளியிட, அ.வாசுதேவன், கு.சபரி, தொழிலதிபர் சி.எஸ்.துரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சாதனை மகளிர் விருதுகள் அளிப்பு: விழாவில், சிறப்பாக மகளிர் தொண்டாற்றிய பாத் குளோபல் பப்ளிக் பள்ளி முதல்வர் எஸ்.உமா மகேஸ்வரி, வெ.சென்னம்மாள், ஆ.பாக்கியலட்சுமி, ரோஸ்லின் ஜெகதீஷ் ஹென்றி, ப.சுமதி, க.கல்யாணி நடராசன், ரேவதி சந்தோஷ் உள்பட 20 பேருக்கு சாதனை மகளிர் விருதுகளை திரைப்பட இயக்குநர் ராசி.அழகப்பன் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த சமூக சேவகர் பி.மணிமாறன், அம்பி பீ.சுப்பிரமணி, வி.மோகன சூர்யா, வெ.ராமு ஆகியோருக்கு மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் விருதுகள் வழங்கினார். விழாவில், ப.கதிரவன், கவிஞர் உமாதேவி பலராமன், திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், பி.கோ.கோவிந்தராஜன், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலர் இரா.அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com