யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நூற்றாண்டு விழா கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேவார இசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேவார இசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை செந்தில் கனபாடிகள் தலைமையில், சிறப்பு யாகசாலைப் பூஜைகள், மூலவர் யோகி ராம்சுரத்குமார் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை பக்தர்கள் தங்களது பகவான் அனுபவங்களை பகிர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 முதல் 6 மணி வரை பா.சற்குருநாத ஓதுவார் குழுவினரின் தேவார இசை நிகழ்ச்சி, மாலை 6.15 முதல் 8.15 மணி வரை ராமாயணமும், ராம்சுரத்குமாரும் என்ற தலைப்பில் ஸ்ரீடி.ஏ.ஜோசப்பின் சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்ச்சிகள்: புதன்கிழமை (மார்ச் 14) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பக்தர்களின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ஆர்.கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை வயலின் மேஸ்ட்ரோ கலைமாமணி ஸ்ரீஆர்.குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.  
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகிகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com