நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மருத்துவ அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் இர.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மருத்துவர் சி.சுந்தர்சாமி, சங்க நிர்வாகிகள் பிரேம்குமார், ரவீந்தர், புகழேந்தி, மணிகண்ட பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்க அளிக்க குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com