மாத்தூர் கிராமத்தில் திருக்குறள் திருவிழா

செய்யாறை அடுத்த மாத்தூர் கிராமத்தில் திருக்குறள் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

செய்யாறை அடுத்த மாத்தூர் கிராமத்தில் திருக்குறள் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருக்குறள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பதிப்பாளர் ஏ.மாரிமுத்து கலந்து கொண்டு அற மேம்பாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை அடங்கிய நூலை வெளியிட்டார். அப்போது, திருக்குறள் உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் அதில் அறம், பொருள், இன்பம் என முப்பாலைத் தவிர ஏனைய சிந்தனைகளில் யாதொரு பிரிவுமில்லாமல் பொதுப்படையான ஒழுக்கச் சிந்தனைகளை பற்றிக் கூறுகிறது என்றார்.
மேலும், ஆங்கில நாட்டு அறிஞர் ஜி.யு.போப் திருக்குறளின் சிறப்புகளை பற்றி விளக்கும்போது, திருவள்ளுவரை உலகக் கவிஞர் என பாராட்டுகிறார். தமிழனின் பெருமையை உலகறியச் செய்த நூல் 
திருக்குறள் ஆகும். 
உலகில் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்கப்பட்ட நூல் திருக்குறள். ஏரியல் என்னும் அறிஞர் திருக்குறளை ஒரு தங்க ஆப்பிளைப் போன்றது என்று விவரித்துள்ளார் எனவும் ஏ.மாரிமுத்து குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் பத்மநாபன், முல்லைவாணன், தமிழ்மணி, முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com