மருத்துவக் கல்லூரியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு அரங்கு திறப்பு: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு அரங்கை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு அரங்கை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு தினம் மற்றும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் (பொ) ஷகீல் தலைமை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் குப்புராஜ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் திட்ட மேலாளர் ஆர்.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்கை திறந்து வைத்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயிற்சி மாணவர்களுக்கு வழங்கினார்.
பின்னர், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் செயல்படும் கூட்டு மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பயிற்சி மாணவ, மாணவிகள், மாவட்ட அளவிலான சேவை மையங்களின் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com