திருவண்ணாமலை, செய்யாறு, போளூர் பகுதிகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகள்

திருவண்ணாமலை, செய்யாறு, போளூர் பகுதிகளில் பல்வேறு தனியார் பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன.

திருவண்ணாமலை, செய்யாறு, போளூர் பகுதிகளில் பல்வேறு தனியார் பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன.
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 157 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்தனர். 450-க்கும் அதிகமான மதிப்பெண்களை 37 பேரும், 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை 83 பேரும் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 4 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 3 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் கே.ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி நிர்வாக இயக்குநர் எஸ்.கோட்டீஸ்வரன், பள்ளி முதல்வர் கே.குணசேகரன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி: செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் 111 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீதத் தேர்ச்சியாகும். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் அ.ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வர் அ.ப.சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வர் க.கோவேந்தன் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.
போளூர் டவுன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: போளூர் டவுன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 12 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்தனர்.
இதில், சரண்யா, ராஜேஸ்வரி, சுனில்குமார் ஆகிய மாணவ, மாணவிகள் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர். மேலும், 8 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சியடைந்த மாணவர்களையும் பள்ளித் தாளாளர் வாசு மற்றும் தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com