அரசுப் பள்ளியில் 100% தேர்ச்சி: தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றதற்காக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்று

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றதற்காக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்று வழங்கினார்.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 138 மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுத் தந்தனர். மேலும், தேர்ச்சி அடிப்படையில் இந்தப் பள்ளி மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்தது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பள்ளி தொடர்ந்து 100 சதவீதத் தேர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிலையில், 100 சதவீதத் தேர்ச்சி பெறுவதற்கும், மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடிப்பதற்கும் பாடுபட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணனைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சான்று வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார்
மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com