கிளையூர் காளியம்மன் கோயில் அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளையூர் தாழைமடுவு காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், மலை

ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளையூர் தாழைமடுவு காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், மலை கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளையூர் மலை அடிவாரத்தில் தாழைமடுவு காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை அன்று சிறப்பு வழிபாடு, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர். இந்த நிலையில், கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் செய்யாற்றில் அதிக வெள்ளம் வந்ததால் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் சேதமடைந்தது. இதன் காரணமாக அம்மாவாசை அன்று கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள இந்த பாலத்தின் வழியாகச் செல்லும் பக்தர்கள், பாலம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மலை கிராம மக்களும், பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com