குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்குவோர் இணையதளத்தில் சேவைகளைப் பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடங்குவோர் இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் எளிதாகப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடங்குவோர் இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் எளிதாகப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழகத்தில் புதிதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெற வகை செய்யும் தனி இணையதளம் ட்ற்ற்ல்://ங்ஹள்ஹ்க்ஷன்ள்ண்ய்ங்ள்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்/ம்ள்ம்ங் என்ற பெயரில் தமிழக முதல்வரால் கடந்த 4-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து பெற வேண்டிய தடையின்மைச் சான்று, உள்ளாட்சித் துறையிடம் இருந்து பெற வேண்டிய உரிமம், மின்வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய இணைப்பு ஆகிய சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர்கள் அந்தந்த அலுவலகங்களுக்குச் செல்லாமல் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்து சுகாதாரத் துறையிடம் இருந்து பெற வேண்டிய தடையின்மைச் சான்று, உள்ளாட்சித் துறையிடம் இருந்து பெற வேண்டிய உரிமம், மின்வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய இணைப்பு ஆகிய சேவைகளைப் பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை- 606 604 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 9444650082, 9840566320 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com