பிளஸ் 2 உடனடித் தேர்வில் வெற்றி பெற சிறப்புப் பயிற்சி: தோல்வியடைந்த மாணவர்கள் பங்கேற்கலாம்

திருவண்ணாமலையில் நடைபெறும் பிளஸ் 2 உடனடித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறப்புப் பயிற்சியில், தேர்வில்

திருவண்ணாமலையில் நடைபெறும் பிளஸ் 2 உடனடித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறப்புப் பயிற்சியில், தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று கல்வித் துறை தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளை உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கான முயற்சிகளை மாவட்ட கல்வித் துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2-வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு வரும் 30-ஆம் தேதி சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
திருவண்ணாமலையை அடுத்த புத்தியந்தல் கிராமத்தில் உள்ள விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் ஜூன் மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி, தொழில் கல்வி பயிற்சி, வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும். கலசப்பாக்கம், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தவறிய மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து ஒரு பொறுப்பு ஆசிரியருடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகள் தங்களது பெயரை வரும் 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்குள் கல்லூரியில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து வசதி கல்லூரி நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களான பி.பன்னீர் செல்வத்தை 9150622688, 9487754698 என்ற எண்களிலும், கோபாலகிருஷ்ணனை 9444889294 என்ற எண்ணிலும், ஜி.குமாரை 9443105267 என்ற எண்ணிலும், பச்சையப்பனை 9486848170 என்ற எண்ணிலும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை 8754252452 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com