ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, திருவண்ணாமலையில் புதிய விடுதலைக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, திருவண்ணாமலையில் புதிய விடுதலைக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச் செயலர் ஏ.ரசூல் தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.ஜவஹர்பாஷா, நகரத் தலைவர் அன்சர் பாஷா, போளூர் நகர பொறுப்பாளர் ஏ.ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் முக்ரம் வரவேற்றார். கட்சியின் மாநிலத் தலைவர் காஜா மொய்தீன், மாநில துணைத் தலைவர் செஞ்சி சவுகார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், கட்சியின் நகரச்
செயலர் பசூலுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com