கலசப்பாக்கம் தொகுதியில் ரூ.2 கோடியில் தார்ச் சாலைப் பணிகள்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.15 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.15 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் பருவத மலையில் பழைமைவாய்ந்த  மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
 இந்த மலைக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இந்ததால், இந்தச் சாலையை சீரமைக்க கலசப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பச்சையம்மன் கோயில் முதல் பருவதமலை வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தார். உடன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் எல்.என்.துரை, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் மற்றும்   ஒப்பந்ததாரர் வெங்கடேசன், அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
காஞ்சி, முத்தனூர் பகுதிகளில்...: கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சி, முத்தனூர், ஒடஞ்சமடை ஆகிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமப்புற மேம்பாட்டு நிதியின் கீழ், முத்தனூர் முதல் ஒடஞ்சமடை வரையிலும், காஞ்சி காலனி முதல் சிங்காரவாடி வரையிலும் தார்ச் சாலை அமைக்க ரூ. ஒரு கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணிகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தார். மேலும், அந்தப் பகுதியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றவா என அந்தப் பகுதி மக்களிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.
உடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் மீனாகுமாரிபுருசோத்தமன், அரசு ஒப்பந்ததாரர்கள் ஏழுமலை, சுப்பிரமணி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் துரை, முன்னாள் கவுன்சிலர் துரைசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com