இலங்கை அகதிகள் முகாமில் டெங்கு தடுப்புப் பணி

செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் டெங்கு தடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் டெங்கு தடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்க் கோட்ட அலுவலர் ரா.அன்னம்மாள் மேற்பார்வையில், செய்யாறு வட்டாட்சியர் க.மகேந்திரமணி, வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.எம்.பழநி ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடுதோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், தண்ணீர்த் தொட்டிகளில் காணப்பட்ட ஏடிஸ் கொசு முட்டைகளை அழிக்க தொட்டிகளில் கிருமி நாசினி பொடி தெளித்து சுத்தப்படுத்தினர். தொடர்ந்து, கொசு லார்வாக்களை அழிக்க டெமிபாஸ் மருந்து தெளித்தும், முதிர் கொசுக்களை அழிக்க கொசுப்புகை அடித்தும் டெங்கு பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பின்னர், டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
அப்போது, பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் முறைகளையும், கைகள் கழுவும் முறைகளையும் செய்முறையாக அந்தப் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் செய்து காண்பித்தனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.இளங்கோ, சுகாதார ஆய்வாளர் தி.அருளரசு, முகாமின் நலப் பணியாளர் உஷாநந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com