அத்திமூர் தாக்குதலில் இறந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதால் இறந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதால் இறந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ருக்குமணி. இவர், தனது உறவினர்களுடன் போளூரை அடுத்த ஜம்பந்கிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காரில் சென்றார். போளூரை அடுத்த அத்திமூர் பகுதியில் சென்றபோது, கோயிலுக்கு செல்ல அந்தப் பகுதியைச் சேர்ந்த சிவாவிடம் வழி கேட்டார். அப்போது, காரில் வந்தவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என எண்ணிய கிராம மக்கள், அவர்களை சரமாரியாகத் தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த ருக்குமணி, அவரது உறவினர் கஜேந்திரன் ஆகியோர் இறந்தனர். இதையடுத்து, இருவரின் குடும்பங்களுக்கும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. ஒரு லட்சம்  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
நிவாரண நிதி அளிப்பு: அதன்படி, 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. ஒரு லட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உதவி ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, 2 பேரின் குடும்பத்தினரிடமும் தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com