செய்யாறு அருகே 2 கிராமங்களில் பொதுமக்கள் போராட்டத்தால் புதிய மதுக் கடைகள் மூடல்

செய்யாறு அருகே பெரும்பாலை, தொழுப்பேடு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடைகள் பொதுமக்கள் போராட்டங்களால் உடனடியாக  மூடப்பட்டன.

செய்யாறு அருகே பெரும்பாலை, தொழுப்பேடு ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடைகள் பொதுமக்கள் போராட்டங்களால் உடனடியாக  மூடப்பட்டன.
செய்யாறு வட்டம், பெரும்பாலை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அரசு மதுக் கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சித்தனர். கிராம மக்கள் போராட்டத்தால் ஈடுபட்டதால், திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் அதே பகுதியில் அரசு மதுக் கடையை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக, விற்பனையாளர் 2 பெட்டிகளில் மதுப் புட்டிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்துள்ளார்.
இதனையறிந்த கிராம மக்கள், அரசு மதுக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்கள் கொண்டு வந்த மதுப் புட்டிகள் அடங்கிய பெட்டிகளைப் பிடுங்கி சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, செய்யாறு - வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் இரா.அன்னாம்மாள், செய்யாறு டி.எஸ்.பி. பொற்சொழியன், கலால் வட்டாட்சியர் பாபு ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
அப்போது, கடந்த மாதம் கடையை திறக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தும் மீண்டும் அதே இடத்தில் அரசு மதுக் கடையை திறக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே, இந்தப் பகுதியில் மதுக் கடையை திறக்க மாட்டோம் என எழுத்துப்பூர்மாக அளியுங்கள் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேசி சாலை மறியலைக் கைவிடச் செய்தார். மறியல் காரணமாக செய்யாறு - வந்தவாசி சாலையில்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தொழுப்பேடு கிராமத்தில்...: இதே போன்று, செய்யாறை அடுத்த தொழுப்பேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் புதிதாக அரசு மதுக் கடையை திறந்து விற்பனையைத் தொடங்கியதாகத் தெரிகிறது.
இதனையறிந்த கிராம மக்கள், செய்யாறு - ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் மேனகா, காவல் உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  எனினும், மதுக் கடையை அந்தப் பகுதியில் இருந்து அகற்றிய பிறகே கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com