வந்தவாசியில் மத நல்லிணக்கக் குழு ஏற்படுத்தக் கோரிக்கை

விநாயகர் சிலைகள் ஊர்வல பிரச்னை தொடர்பாக, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில், மத நல்லிணக்கக் குழு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் ஊர்வல பிரச்னை தொடர்பாக, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில், மத நல்லிணக்கக் குழு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
வந்தவாசியில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதியன்று விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினர் கல் வீசித் தாக்கிக் கொண்டனர். 
இதையடுத்து, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேரை வந்தவாசி தெற்கு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அனைத்து சமுதாய, கட்சியினர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் அ.அரிக்குமார், டிஎஸ்பி பொற்செழியன் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர், கட்சியினர் பங்கேற்றனர்.
இதில், வந்தவாசியில் மத நல்லிணக்கக் குழுவை ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இரு தரப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும்.
கூட்டங்களில் மற்ற மதத்தினரை தாக்கி பேசக் கூடாது. கலவர பின்னணி உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாக் காலங்களில் அரசு மதுக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றோர் பேசினர். பின்னர், பேசிய செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், ஊர்வலம், கூட்டங்கள் அமைதியாக நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com