வந்தவாசியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 94-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அந்த சங்கத்தின் வேலூர் கோட்டம் சார்பில், வந்தவாசியில் அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 94-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அந்த சங்கத்தின் வேலூர் கோட்டம் சார்பில், வந்தவாசியில் அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற பொது மேலாளர் பி.சுந்தரேசன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை பம்பை சேகர் குருசாமி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள பஜனை கோயில் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் தேரடி, திண்டிவனம் சாலை, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை, காமராஜர் நகர் வழியாக சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகில் சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை  சீருடை அணிந்து பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக மாநில அமைப்பாளர் பி.எம்.ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் எஸ்.நாகராஜன், எஸ்.நீலகண்டன், கோ.ராமநாதன், ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com