8 வழிச்சாலை அமைந்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பர்

8 வழி பசுமைச் சாலை அமைக்கப்பட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறு, குறு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

8 வழி பசுமைச் சாலை அமைக்கப்பட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறு, குறு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  சேலம் - சென்னை இடையிலான 8 வழிச் சாலைத் திட்டம் என்பது கண்மூடித்தனமானது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறு, குறு விவசாயிகள் தங்களது வாழ்வாதரத்தை முற்றிலுமாக இழக்கும் நிலை ஏற்படும்.
8 வழிச்சாலை, 6 வழிச் சாலை, 4 வழிச்சாலை என எதுவாக இருந்தாலும் விவசாயிகளிடம் கருத்து கேட்டபிறகுதான் திட்டத்தைத் தொடங்க வேண்டும். எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகள் மத்தியில் திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.
குட்கா விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். இதன் உண்மை நிலையை அறிய பொதுமக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட ஒரு பொருளை பொதுமக்கள் மத்தியில் விற்பனை செய்தது ஏன், எப்படி என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மையை குறித்த காலத்துக்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் சிபிஐ, மத்திய அரசு மீதான நம்பிக்கை போய்விடும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளில் தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com