குடியாத்தம் மோர்தானா அணை திறப்பு

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை குடிநீர்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் சனிக்கிழமை திறந்து விடப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணி அணையைத் திறந்து வைத்தார்.

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை குடிநீர்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் சனிக்கிழமை திறந்து விடப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணி அணையைத் திறந்து வைத்தார்.
11.5 மீட்டர் உயரம் உள்ள மோர்தானா அணையில், தற்போது 9 மீட்டர் உயரம் (190 மில்லியன் கன அடி) தண்ணீர் உள்ளது.
அணையிலிருந்து கௌன்டன்யா ஆறு வழியாக விநாடிக்கு 100 கன அடி வீதமும், வலது, இடது புறக் கால்வாய்கள் வழியாக தலா 70 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன்படி, வரும் 29-ஆம் தேதி காலை 8 மணி வரை 7 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் செருவங்கி ஏரி, பசுமாத்தூர் ஏரி, சித்தேரி, காவனூர் ஏரி, அக்ராவரம் ஏரி, பெரும்பாடி ஏரி, எர்த்தாங்கல் உள்ளிட்ட 11 ஏரிகளும், குடியாத்தம் வட்டம் சீவூர், செதுக்கரை, அம்மணாங்குப்பம், வேப்பூர், பசுமாத்தூர், காவனூர், அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை, தாழையாத்தம், செருவங்கி ஆகிய கிராமங்களுக்கும், காட்பாடி வட்டம் மேலூர், கீழூர், கொத்தமங்கலம், வடவிரிஞ்சிபுரம், சோழமூர், தண்டல கிருஷ்ணாபுரம், வஞ்சூர் ஆகிய கிராமங்களுக்கும், பேர்ணாம்பட்டு வட்டத்தில் செட்டிகுப்பம், மேல்முட்டுகூர், மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, ஒலக்காசி, சித்தாத்தூர் உள்ளிட்ட 30 கிராமங்களிலும், குடியாத்தம் நகரிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6,534 ஏக்கர் நிலங்கள் பாசனம், குடிநீர் வசதி பெறும்.
அணையை வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எம்எல்ஏக்கள் சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, கே.வி. குப்பம் ஜி.லோகநாதன், பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் வி.ராமு, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் கே.ஆர்.ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் பி.அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com