'பயிர் பாதுகாப்பு திட்டத்தில் தமிழக விவசாயிகள் பதிவு செய்யவில்லை'

தமிழகத்தில் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்யவில்லையென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்யவில்லையென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுதில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 50 லட்சம் விவசாயிகள் தங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனை உடனடியாக சரிசெய்து விவசாயிகளை பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
நீராதாரத்தை பெருக்க தக்க நடவடிக்கை எடுக்காமல் தக்கையை வைத்து அணையை மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு செயல்படுத்தியுள்ளார்.
இடஒதுக்கீடு பிரச்னைக்காக நடத்தப்படும் மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றார்.
பேட்டியின்போது, வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com