விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக முழு கடையடைப்பு: அனைத்து வணிகர்கள் சங்கம் முடிவு

புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம் பங்கேற்கப் போவதாக

புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம் பங்கேற்கப் போவதாகஅறிவித்துள்ளது.
அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் அனைத்து வணிகர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு தலைமை வகித்தார். செயலாளர் அசோகன், பொருளாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
காய்கறி வணிகர் சங்கத்தின் தலைவர் பாலு, ஜவுளி வணிகர் சங்கத் தலைவர் ஏ.வி.எம்.குமார், அச்சக உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணா, புஷ்ப வியாபாரிகள் சங்கச் செயலாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 5,46,385 கோடி சலுகை, தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி ரூ. 72,000 கோடி சலுகை போன்றவற்றை வழங்கிய மத்திய அரசு, கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் சங்கம் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com