உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க  கிராம மக்கள் எதிர்ப்பு

நாட்டறம்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

நாட்டறம்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசின் மின்சார திட்டத்தின் மூலம், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, சேலம் வழியாக ஈரோடு மாவட்டம், காங்கேயம் மின்நிலையம் வரை 800 கிலோவாட் மின்சாரம்  இரட்டை சுற்று மின்பாதை அமைக்கும் பணி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்பலகுண்டா ஊராட்சி வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க மின்பாதை அளவிடுதல் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதி வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கக் கூடாது என கூறி, மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால், மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
மேலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஏதுகைமலை பகுதி வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என கூறி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com