கம்பருக்கு நிகர் கம்பர்தான்: பேராசிரியர் அப்துல்காதர்

பாத்திரங்களை படைப்பதிலும், சொல்லாற்றலிலும் கம்பருக்கு நிகர் கம்பர்தான் என பேராசிரியர் அப்துல்காதர் கூறினார்.

பாத்திரங்களை படைப்பதிலும், சொல்லாற்றலிலும் கம்பருக்கு நிகர் கம்பர்தான் என பேராசிரியர் அப்துல்காதர் கூறினார்.
திருப்பத்தூர் கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி ரா.மாது தலைமையில் இளையோர் அரங்கம் நடைபெற்றது. இதையடுத்து பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் அப்துல் காதர் பேசியதாவது: ஆயிரம் ராவணன் வந்தாலும், ராமனை வெல்ல முடியாது என்பதைச் சொல்லும் கவிதை திறனிலும், சொல்லாற்றலிலும், ராமனின் அறத்தையும், வீரத்தையும், துணிவையும் யாராலும் கம்பரைத் தவிர எடுத்துக் கூற இயலாது. கம்பன் எனும் சமையலுக்கு உப்பு போன்றவர் சடையப்ப வள்ளலார். அவர் இல்லையெனில் கம்ப ராமாயணம் எனும் காவியம் நமக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்.
கம்ப ராமாயணத்துக்குப் பிறகு 63 ராமாயணங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டில், ஆந்திர மாநிலத்தில் பத்மநாப ராமாயணம் வெளிவந்துள்ளது. எனினும்,  கம்பன் கம்பன்தான், கம்பராமாயணம் கம்பராமாயணம் தான். சமயங்களுக்குதான் சின்னங்கள் உண்டு. தெய்வத்திற்கு அடையாளம் இல்லை. அறத்தின் வழி நடந்த ராமனை மனித வாழ்வுக்கு அடையாளம் காட்டிய புகழ் கம்பனையே சாரும் என்றார்.
இதையடுத்து, கம்பன் குறித்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு, பட்டிமன்றம் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com