திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சார் ஆட்சியர் ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாறு பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூர்வாரப்படாமலும் உள்ளது. எனவே பாலாற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சார் ஆட்சியர், இது மிகப் பெரியத் திட்டம். பாலாற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
ஜாப்ராபாத், உதயேந்திரம் கால்வாய் தடுப்பணைகளை 2 அடியாக உயர்த்த வேண்டும் என மற்றொரு விவசாயி கூறியதற்கு, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என சார் ஆட்சியர் பதிலளித்தார்.
மேலும், மதனசேரி, மேல்குப்பம், தாதன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டித் தர வேண்டும், பெத்த கொட்டாய் ஏரி, திருப்பத்தூரில் உள்ள பெரிய ஏரி ஆகியவற்றை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com